jeudi 28 février 2013

மைத்திரேயின் சமையல் கட்டு 02

பிறிங்ஜோல் பாய் ( brinjal palya or Egg plant palya )



என்னவேணும்:

சின்னக் கத்தரிக்காய் கால் கிலோ.
பெரிய வெங்காயம் சிவப்பு ( பம்பாய் ) 1 அல்லது சின்ன வெங்காயம் 4 .
உள்ளி 3 பல்லு .
வினிகர் 2 மேசைக்கரண்டி.
சீனி அரைத் தேக்கரண்டி .
தனி மிளகாய்த் தூள் அல்லது அரைநொருவல் மிளகாய்த் தூள் 2 மேசைக் கறண்டி.
எண்ணை ( தேவையான அளவு ).
உப்பு ( தேவையான அளவு ).
மஞ்சள் தூள் ( சிறிதளவு ) .
பச்சை மிளகாய்  4

கூட்டல்:

கத்தரிக்காயை தண்ணியிலை கழுவி அரைவாசியாய் வெட்டி நீளப்பாட்டுக்கு வெட்டுங்கோ . தாச்சி சட்டியிலை பொரிச்சு அள்ளுங்கோ . வெங்காயம் ,பச்சை மிளகாய் ,  உள்ளி எல்லாவற்றையும்  நீளப்பாப்பாட்டுக்கு வெட்டுங்கோ . பொரிச்ச கத்தரிக்காயினுள் வெட்டியதையும் உப்பு , தூள் , மஞ்சள்தூள் எல்லாவற்றையும் போட்டு , மெதுவான வெக்கையில்  5 அல்லது பத்து நிமிடங்கள் விடுங்கோ.

பிகு :

** வெதுப்பியில் உள்ள வெதுப்பி தட்டில் சிறிது எண்ணை விட்டு வெட்டிய கத்தரிக்காயை போட்டு , அதற்கு மேலையும் சிறிது எண்ணை விட்டு நன்றாக கலந்து , 300 C டிகிறியில் கிறிலில் செற் பண்ணி பொரிக்கலாம் . இப்பிடி செய்தால் குறைந்த எண்ணை முடியும் . அத்துடன் வீடும் பொரித்த மணம் மணக்காது . இப்படித்தான் நான் வீட்டில் செய்வேன் .

*** இந்த பிறிங்ஜோல் பாய் மிகவும் சுலமான செய்முறை . முக்கியமாய் தனிய இருக்கிற பெடியளுக்கு ஏற்றது . இதை நீங்கள் பிரியாணி , ஃபிறைட் றைஸ் போன்றவற்றுக்கு ஒரு பக்கத் துணையா சேத்து சாப்பிடலாம் .

மைத்திரேயி
28/02/2013



2 commentaires:

  1. கறி அருமை என் பிள்ளைகளுக்கு மிகவும் படிக்கும். அடிக்கடி செய்வேன். எண்ணையில் பொரிப்பது அவ்வளவு நல்லதல்ல . கிரில் முறை எனக்கு புதிது... அறிய நேரில் வ்ருகிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. உங்கடை கருத்துக்கு நன்றி நிலாமதி . கிறிலில் பொரிப்பது கஸ்ரம் இல்லை . முயற்சி செய்யுங்கோ கட்டாயம் சரிவரும் .

      Supprimer