jeudi 21 février 2013

மைத்திரேயியின் சமையல்கட்டு

உள்ளிக் குழம்பு


என்னவேணும் ???

உள்ளி 6 பிடி
உரிச்ச சின்னவெங்காயம் 5
பச்சைமிளகாய் 3
கறிவேப்பமிலை ( தேவையான அளவு )
தனி மிளகாய் தூள் 2 தே கறண்டி
பழப்புழி ( தேவையான அளவு )
மிளகு தூள் அரை தேக்கறண்டி
முதல் தேங்காய் பால் 1 அரைக் கப்
நல்லெண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

கூட்டல் :

உள்ளியை உடைச்சு முழுசாய் ஒரு பாத்திரத்திலை சேருங்கோ . வெங்காயம் பச்சை மிளகாயை வெட்டி வையுங்கோ . ஒரு மண்சட்டியிலை  நல்லெண்ணை விட்டு எண்ணை கொதித்த உடனை வெட்டின சின்னவெங்காயத்தை போடுங்கோ . வெங்காயம் பொன்னிறமாய் வர பச்சைமிளகாய் கறிவேப்பிலையை போடுங்கோ . கொஞ்ச நேரத்தாலை தனிமிளகாய்த் தூள் மிளகு தூள் எல்லாவற்றையும் போடுங்கோ . கரைச்ச பழப்புளியைவிட்டு கொஞ்ச தண்ணி சேருங்கோ .  தூள் மணம் எடுபட கொதிக்க விட்டு , துப்பரவாக்கின முழு உள்ளியை போடுங்கோ . முதல் தேங்காய்ப் பாலையும் சேருங்கோ குழம்பு தடிக்கமட்டும் மெதுவான வெக்கையிலை வேகவையுங்கோ . 

பிகு : மண்சட்டி இல்லாதவை நோர்மல் சட்டியிலை செய்யலாம் . ஆனால் ரேஸ்ற்ரிலை கொஞ்சம் வித்தாயாசப்படும்   .

இந்த உள்ளி குழம்பு உடம்புக்கு நல்லது . வாயுத்தொல்லைக்கு நல்லது . பக்கவிளைவுகள் இல்லாதது .

மைத்திரேயி
21/02/2013

2 commentaires:

  1. சமையல் முறை நல்லாய் இருக்கு இந்தக் கால இளசுகள் உள்ளி என்றால் எட்ட நிக்கினம்.
    எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கவனியுங்கோ ..சில நேரம் கணணியும் சதி செய்யும்

    உ +ம் .............. பழப் புளி

    RépondreSupprimer
  2. உங்கள் கருத்துக்கு நன்றி . கனகாலம் தமிழ் எழுதாமையினால் என்னை அறியாமல் சில எழுத்துப் பிழைகள் வருகின்றன . வருங்காலங்களில் திருந்துவேன் என நம்புகின்றேன்.

    RépondreSupprimer