dimanche 13 janvier 2013

அவளை யார் அறிவார் ???


பால்குடி மாறிப்
பத்துவயது நடந்தபொழுது
அடிவயிற்றில் ஓர்வலி
கீறலாய் உதித்தது
எதுவுமே புரியாத அவளுக்கு
அவள் அம்மா எடுத்துரைத்தாள்
பருவத்தின் அழைப்பு மணியை
அவள் வாழ்வு பூராக
அவளுடன் தொடரப்போகும்
இந்தப் புரியாத வலி
அவளிற்குச் சத்தியமாகத் தெரியாது

பருவத்தின் தூரிகைகள்
அவள் உடலில்
பக்குவமாய்க் கோலமிட
அவள் பள்ளிக் கூட்டுகள்
பதறியே அவளை நோக்க
பாவை அவள் மனதும்
கர்வத்தால் பறந்தே திரிந்தது
 
முகத்தைக் காட்டும் கண்ணாடி
அவள் உற்ற தோழியானது
றெக்ஸ்சோனாவும்
பெயர் அண்ட் லவ்லியும்
அடிக்கடி கரைந்தே போனது

காலதேவன் போட்ட கோலம்
அவளை கட்டிளம் குமரியாக்க
அவளை கட்டியேபோட
அவள் அப்பா
அலைமோதி அலைந்தார்

வெள்ளை நிறத்தவனாம்
வெளிநாட்டு மாப்பிளையாம்
என்ஜினியராம்
கைநிறைய யூறோவாம்
என ஊரெங்கும் இதே பேச்சு

பந்தாவாவாக வந்த பொலிகாளை
வக்கிரமாய் அவளைப் பார்க்க
அவள் மனதில் ஊசியாகக் குத்தியது
பத்தில் வந்த அதே வலி
அவள்மனவலி அவள்
அம்மா அப்பாவின் கண்ணீர் முன்
கதிரவனைக் கண்ட
பனித்துளி போல பாகாய் உருண்டோட
அவள் மனவலி மட்டும்
அவள் மனதில் ஆழமாய்க் கோடு கிழித்தது

பலவேளை பொலிகாளை
அவள் சம்மதமின்றிப் பொங்கியெள
மனம் மரத்த அவள் மரக்கட்டையானாள்
காலதேவன் போட்ட ஓட்டத்தில்
அவள்மனவலியும் ஓடிச்செல்ல
அவன் அம்மா
அவளுக்கு வைத்த பெயர் " மலடி "     

மைத்திரேயி

4 commentaires:

  1. Ce commentaire a été supprimé par un administrateur du blog.

    RépondreSupprimer
  2. அம்மா அப்பாவின் கண்ணீர் முன்
    கதிரவனைக் கண்ட
    பனித்துளி போல பாகாய் உருண்டோட
    அவள் மனவலி மட்டும்
    அவள் மனதில் ஆழமாய்க் கோடு கிழித்தது...////////

    ..பெண்களுக்கு மன வலி கூடிப்பிறந்த சொத்து..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
    வகை வலி ..பாராட்டுக்கள்.உங்கள் பதிப்புகள் நிறைய வரவேண்டும். ////////

    உங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் நிலாமதி












    RépondreSupprimer
  3. ஆபிரிக்காவில் பிறந்து, அலாஸ்காவின் மிருகக்காட்சிச்சாலையில் வாழும் விலங்கின் வாழ்வாக, எமது வாழ்வு மாறப்போக, ஆண் மட்டும் வேறு தெரிவுகள் இன்றி அந்த வாழ்வை ஏற்றுக்கொள்வதும், அதே வாழ்வுக்குத் தனது துணையைப் பழக்கப்படுத்த முயல்வதும்,வேறு வழியின்றி,அந்தத் துணையும், தனது சுயத்தைத் தொலைத்துவிடுவதையும் உங்கள் கவிதை சொல்கிறது. ஒரு ஆர்வத்தில், ஆரம்பித்து விட்டுப் பின்பு நாளாந்த வாழ்வில் அமிழ்ந்து விடாது, தொடர்ந்து எழுதுங்கள், மைத்திரேயி!

    RépondreSupprimer

  4. ஆபிரிக்காவில் பிறந்து, அலாஸ்காவின் மிருகக்காட்சிச்சாலையில் வாழும் விலங்கின் வாழ்வாக, எமது வாழ்வு மாறப்போக, ஆண் மட்டும் வேறு தெரிவுகள் இன்றி அந்த வாழ்வை ஏற்றுக்கொள்வதும், அதே வாழ்வுக்குத் தனது துணையைப் பழக்கப்படுத்த முயல்வதும்,வேறு வழியின்றி,அந்தத் துணையும், தனது சுயத்தைத் தொலைத்துவிடுவதையும் உங்கள் கவிதை சொல்கிறது. ஒரு ஆர்வத்தில், ஆரம்பித்து விட்டுப் பின்பு நாளாந்த வாழ்வில் அமிழ்ந்து விடாது, தொடர்ந்து எழுதுங்கள், மைத்திரேயி! ////////// உங்கள் ஆக்க பூர்வமான விமர்சனங்களுக் நன்றி புங்கையூரான் . ஊரில் உள்ள பெண்களுக்கு புலத்து மாப்பிளைகள் தங்களையிட்டு ஒளிவுமறைவுகள் இல்லாத கலந்துரையாடல் செய்தாலே முக்கால்வாசி ஏமாற்றங்கள் பெண்களுக்கு மறையுமே ?? ஆனால் அது நடைமுறையில் இல்லையே ?? ஒருசிலர்தான் உண்மையாக பெண்களுக்கு நடக்கின்றார்கள் . அந்தப் பெரும்பான்மையினரைத்தான் இந்தக் கவிதையில் கோடிட்டு காட்டின்னான் . உங்களது விமர்சனங்களை கருத்துக்களத்திலும் எதிர்பார்கிறன் .

    RépondreSupprimer